தோழிக்குப் பிறந்தநாள் பரிசு... டெலிவரி பாய்க்கு அதிர்ச்சி! - வாலிபர் கைதுSponsoredடெல்லியில், பெண் தோழி ஒருவருக்குப் பிறந்தாள் பரிசாக கைக்கடிகாரம் வழங்கத் திட்டமிட்ட இளைஞரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து, காவல் துணை ஆணையர் பிரசாத் விவரிக்கையில், `டெல்லியைச் சேர்ந்தவர் வைபவ் குரானா (22). பி.டெக் பட்டதாரியான இவர், குருகிராம் பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றில்  பணியாற்றிவருகிறார். இந்நிலையில், இவரது பெண் தோழி ஒருவரின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார். எனவே, விலைமதிப்பான பரிசுப்பொருள் ஒன்றைப் பிறந்தநாள் பரிசாக அளிக்கலாம் எனத் தீர்மானித்த வைபவ், அதற்காக ஆன்லைன் விற்பனை வலைதளத்தை அணுகியுள்ளார். அதில், ரூ.90,000 மதிப்பிலான கைக்கடிகாரம் (Rado wristwatch)ஒன்றை, ஆஃபர் மூலம் ரூ.67,000-க்கு புக் செய்துள்ளார். ஆனால், அவரிடம் கடிகாரத்தை வாங்க போதிய பணம் இல்லை. இந்த நிலையில்தான், திருட்டுச் செயலில் அவர் ஈடுபட்டிருக்கிறார். 

Sponsored


கடிகாரத்தை புக் செய்தபோது, தனது மொபைல் எண்ணுடன் தவறான முகவரியைக் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த தேதியில் கடிகாரத்தை டெலிவரி செய்வதற்காக, அவரது முகவரிக்கு டெலிவரி பாய் வந்திருக்கிறார். அவரிடமிருந்து பொருளை வாங்கிக்கொண்ட வைபவ், `பணம் வீட்டில் உள்ளது; கையில் பொருள் இருப்பதால் காலிங் பெல் அடியுங்கள்' என்று கூறியுள்ளார். அந்த நபரும் அப்படியே செய்திருக்கிறார். இந்த இடைப்பட்ட சந்தர்ப்பத்தில், வெளியே தான் தயாராக வைத்திருந்த பைக்கில் ஏறி பொருளுடன் தப்பித்துச் சென்றுவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக டெலிவரி பாய் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் எண்ணை டிராக் செய்து, அவரைக் கைதுசெய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored