கையில் துப்பாக்கியுடன் சாமியார்... யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு படத்தில் சர்ச்சைSponsoredத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. வினோத் திவாரி இயக்கவுள்ள இந்த படத்தின் பெயர்' ஷிலா கோரக்பூர்'. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. போஸ்டரில் கோயில்கள், பசுவுடன் சாமியார் ஒருவர் நிற்கிறார். பின்னங்கை கட்டியிருக்கும் சாமியாரின் கையில் துப்பாக்கி இருக்கிறது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியினர் கொந்தளித்து போனார்கள். இயக்குநர் வினோத் திவாரி மீது லக்னோ போலீஸிலும் புகார் அளித்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஐ.பி. சிங் கூறுகையில், ''படத்தின் இயக்குநர் மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஆதித்யநாத்  முதல்வர் மட்டுமல்ல கோராக்நாத் கோயிலின் தலைவரும்கூட. ஆதித்யநாத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த படம் எடுக்க நிதி எங்கேயிருந்து வருகிறது என்று கண்டறிய வேண்டும். எக்காரணம் கொண்டும் படத்தை வெளியிட விடமாட்டோம். நீதிமன்றத்தை அணுகுவோம்'' என்று தெரிவித்துள்ளார்

Sponsored


படத்தின் இயக்குநர் வினோத் திவாரி மீது நொய்டா போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த திரைப்படத்தை வெளியிட இயக்குநர் வினோத் திவாரி திட்டமிட்டிருந்தார். 

Sponsored
Trending Articles

Sponsored