கொலிஜியத்தின் பரிந்துரை ஏற்பு! கே.எம்.ஜோசப் விவகாரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு தீர்வுSponsoredஜனவரி மாதம் உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட கே.எம். ஜோசப்பின் பரிந்துரையை தற்போது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறையால் மேலும் இருவரை நியமிக்க கொலிஜியம் முடிவு செய்து, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைக் கடந்த ஜனவரி 10-ம் தேதி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதன் பின்னர் இந்து மல்கோத்ராவின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு கே.எம் ஜோசப்பின் பரிந்துரையை மட்டும் பல்வேறு காரணங்கள் காட்டி தொடர்ந்து நிராகரித்து வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதித் துறைக்கும் பெரும் மனக்கசப்பு ஏற்பட்டது. நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக பல மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டினர். 

Sponsored


தொடர்ந்து இரண்டு முறை கே.எம் ஜோசப்பின் பெயரை மத்திய அரசு நிராகரித்து வந்தது. மூன்றாவது முறையாக கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஜோசப் மீதான பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டு அவருக்குப் பதவி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது. இவருடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோரது பரிந்துரைகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கே.எம் ஜோசப்பின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored