வேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்!Sponsoredஆந்திராவில் வேலை வாய்ப்பின்றி தவித்துவரும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும்வகையில் மாதம்தோறும் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. 

ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அமராவதியில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில வளர்ச்சி தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில், வேலையின்றி தவிக்கும் டிப்ளமோ மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘முக்கிய மந்திரி யுவ நேஸ்தம்' என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Sponsored


அதன்படி, 22-35 வயதில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறமுடியும். வேலைவாய்ப்பின்றி படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் வீட்டில் இருந்தாலும், இத்திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அரசாங்கம் சார்பில் வழங்கப்பட உள்ளது. `இதன் மூலம், 12 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் 20,000 வேலைவாய்ப்புகள், 9,000 ஆசிரியர் பதவிகள் மற்றும் பிற துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதனிடையில், சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக மத்திய அரசிடம் போராடி வரும் ஆந்திர அரசு நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் காரணமாக ரூ.8,000 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள். இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்கு தகுதிபெறுபவர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored