சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!Sponsoredசமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


நாட்டுக்கு எதிரான பதிவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றைக் கண்காணிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. தனியார் நிறுவனத்தின் உதவியுடன், இச்செயல்களில் ஈடுபடப் போவதாக மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்திருந்தது. மத்திய தகவல் ஒளிபரப்புத்துறையின் கீழ் இந்தத் தனியார் நிறுவனம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஒவ்வொரு தனி நபரின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஆகியவை உன்னிப்பாக கவனிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்துக்கு ஆட்சேபணம் தெரிவித்தனர். பொதுமக்களின் கருத்துரிமையில் தலையிடும் செயல் எனவும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தத் திட்டம் தொடர்பாக முழுமையான ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. எனவே, திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored