சந்தையில் மீண்டும் உற்சாகம் ; புதிய உச்சத்தில் நிஃப்டி 03-08-2018



Sponsored



ஏனைய ஆசிய சந்தைகளில் ஒரு மந்தமான போக்கு இருந்தபோதிலும், இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் தீவிரம் காட்டியதன் காரணமாக சந்தையின் முக்கிய குறியீடுகள் சென்செக்ஸும் நிஃப்டியும் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன.

மும்பைச் சந்தையின் சென்செக்ஸ் 391 புள்ளிகள் அதாவது 1.05 சதவிகித லாபத்துடன் 37,556.16 என முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையின்  நிஃப்டி 116.10 புள்ளிகள் அதாவது 1.03 சதவிகித லாபத்துடன் 11,360.80 என ஒரு புதிய உச்சத்தில் நிறைவுற்றது.

Sponsored


ஆசிய சந்தைகளில் அமெரிக்கா - சீனா வர்த்தக யுத்தம் குறித்த கவலையினால் இன்றும் மனநிலை மிகவும் இறுக்கமாகவே இருந்ததினாலும், அமெரிக்காவின் jobs data இன்று வெளியாகும் நிலையில் இருந்த தயக்க நிலை காரணமாகவும் பங்குகள் முன்னேறவில்லை. 

Sponsored


டாலருக்கெதிராக யூரோ சற்று மதிப்பிழந்த நிலையில் ஐரோப்பிய சந்தைகளில் இன்று சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்தியச் சந்தையைப் பொறுத்தவரையில், கடந்த இரு தினங்களில் சந்தை கண்ட சரிவினால் சில சிறந்த பங்குகளின் விலை தற்போது வாங்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டியிருப்பது இன்றைய முன்னேற்றத்துக்கு ஒரு காரணம்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவ மழை நார்மலாக இருக்கும் என்று இந்திய வானிலை நிலையம் அறிவித்திருப்பதும் சந்தையின் ஏறுமுகத்துக்குக் காரணம்.

பார்கைன் ஹண்டிங் தவிர ஷார்ட்-கவரிங் கூட பல பங்குகளின் விலை உயர்வுக்கு காரணமானது. வங்கித் துறை பங்குகள் நன்கு முன்னேறின. உலோகம், நுகர்வோர் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவத் துறை பங்குகளும் நல்ல உயர்வைக் கண்டன. தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல்  கூட்ஸ், ஆட்டோமொபைல், எப்.எம்.சி.ஜி  மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சிலவும் லாபம் கண்டன. 

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங்  5.9%
ஆக்ஸிஸ் பேங்க்  5.2%
வேதாந்தா  3.6%
யெஸ் பேங்க்  3%
கெயில் இந்தியா  2.9%
டாக்டர் ரெட்டி'ஸ் 2.5%
லூப்பின் 2.5%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 2.3%
கோடக் பேங்க் 2.3%
ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் 2.2%
கும்மின்ஸ் இந்தியா 7.3%
அதானி பவர் 7%
டாரென்ட் ஃபார்மா 6.9%
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 5.8%

விலை சரிந்த பங்குகள் :

ஜெட் ஏர்வேஸ் 7%
சென்னை பெட்ரோலியம் 3.7%
GE பவர் 3.2%
லார்சென் & டூப்ரோ இன்ஃபோடெக் 3.1%
KEC இன்டர்நேஷனல் 3%
 



Trending Articles

Sponsored