ஆந்திர கல்குவாரியில் வெடி விபத்து - 15 பேர் உயிரிழந்த பரிதாபம்!ஆந்திராவில் நடந்த கல்குவாரி வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sponsored


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது ஹாதி பேகள். இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரி ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் நூற்றுக்கணக்கோர் பணிபுரிந்த கல்குவாரியில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Sponsored


சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளை அதிகளவு பயன்படுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெடிவிபத்தால் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored