`அமெரிக்காவைவிடச் சிறந்த சாலைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது' - சிவராஜ் சிங் சௌகான்!Sponsoredஅமெரிக்காவை விடச் சிறந்த சாலைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது எனக் கருத்துக் கூறியுள்ளார் அம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான். கடந்த புதன்கிழமை நடைபெற்ற அவரது பேரணியான 'ஜன் ஆஷிர்வாத் யாத்ரா'வில் இவ்வாறு பேசியுள்ளார். 'மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி(பிஜேபி) ஆட்சிக்கு வந்தபிறகுதான், நமது மாநிலத்துக்கு அதிகமான மின்சாரமும் சிறந்த சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார். மேலும் 'நான் அமெரிக்காவுக்குச் சென்றபோது, ​​'அன்புள்ள அமெரிக்கர்களே, உங்களிடம் சாலைகள் இருக்கலாம், ஆனால் உங்களைவிட எங்களிடமே சிறந்த சாலைகள் இருக்கின்றன எனக் கூறினேன் என்றும் சொல்கிறார் சிவராஜ் சிங் சௌகான். பேரணியின்போது மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம் எனவும் பேசியுள்ளார் சிவராஜ்.

பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மத்தியப் பிரதேசத்தில் சாலைகள் அமைத்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 1,900 மெகா வாட்டாக இருந்த மின்சார உற்பத்தி இப்போது 18,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் மத்தியப் பிரதேசம் தற்போது ஒரு மின்மிகை மாநிலமாக இருக்கிறது எனவும் பெருமையாகக் கூறியுள்ளார் சிவராஜ் சிங் சௌகான். இவர் கூறிய கருத்துகளை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து ட்ரெண்டாக்கியுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த வருடமும் இதேபோன்று மத்தியப் பிரதேசம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை விடவும் மிகச் சிறந்த இடம் எனக் கூறியிருந்தார். அதுவும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored