கத்தியுடன் வந்த மர்ம நபர்! - கேரளா விருந்தினர் இல்லத்தில் நடந்த பரபரப்பு காட்சிSponsoredடெல்லி, கேரளா விருந்தினர் இல்லத்தின் முன்பு வன்முறையில் ஈடுபட்ட நபரை பாதுகாவலர்கள் உடனடியாக வெளியேற்றி கைது செய்தனர். கையில் கத்தியுடன் அந்த நபர் வன்முறையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டெல்லியில் இன்று நடைபெறும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். புது டெல்லி, ஜந்தர் மந்தர் சாலையில் அமைந்துள்ள கேளர விருந்தினர் இல்லத்தில் பினராயி விஜயன் தங்கியுள்ளார். இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட அவரிடம் பேட்டி எடுக்க, ஏராளமான செய்தியாளர்கள் இல்லத்தின் முன்பு காத்திருந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் செய்தியாளர்களுடன் செய்தியாளராகச் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை விசாரிக்க அழைத்துள்ளனர். 

Sponsored


அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கையில் எடுத்து வன்முறையில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாதுகாவலர்களுடன் அவர் வாதிடும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

Sponsored


இதுதொடர்பாகப் போலீஸார் கூறுகையில்,`வன்முறையில் ஈடுபட முயன்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் பெயர் விமல் ராஜ், கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்தவர். அவரது மனநிலை 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இருப்பினும், அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்' என்றார். Trending Articles

Sponsored