ஒடிசாவில் ஏழை எம்.எல்.ஏ- வின் மனிதாபிமானமிக்க செயல்! Sponsoredவுன்சிலர்களே கோடியில் புரளும் இந்தக் காலத்தில் எம்.எல்.ஏ ஒருவர் இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். சொந்தமாகக் காணி நிலம்கூட அவர் பெயரில் கிடையாது. அந்த எம்.எல்.ஏ-யின் பெயர் ரமேஷ் பாடுவா. பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் பணியாற்றுவதில் சிறந்தவர் என நற்பெயர் பெற்றவர். சமீபத்தில் ஜர்க்சுடா தொகுதிக்குட்பட்ட அம்னாபாலி கிராமத்தில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துபோனார். கிராமத்தில் பிச்சையெடுத்து வாழ்ந்த அந்தப் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் முன்வரவில்லை. காரணம் சாதி... இந்தப் பெண் எந்தச் சாதியோ நாங்கள் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்று ஒதுங்கிக்கொண்டனர். 

இந்தத் தகவல் அருகில் உள்ள கிராமத்தில் வசித்த மக்கள் ரெங்காலி தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் பாட்வாவுக்கு சென்றது. சம்பவ இடத்துக்கு உறவினர்களுடன் சென்ற அவர், இறந்து கிடந்த பெண்ணின் உடலை குளிப்பாட்ட வைத்தார். பின்னர், பாடையில் வைத்து அவரும் உறவினர்களும் மயானத்துக்குத் தூக்கிச் சென்றனர். மயானத்தில் மகன் ஸ்தானத்தில் இருந்து அந்தப் பெண்ணின் சடலத்துக்கு இறுதி காரியங்களை செய்து தகனம் செய்தார். 

Sponsored


``என்னிடம் சிலர் போனில் இந்தத் தகவலைச் சொன்னார்கள். நானும் என் மகன்களும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அந்தப் பகுதி மக்களிடம் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று நம்புகின்றனர். மக்களின் நம்பிக்கையில் நான்  தலையிட விரும்பவில்லை. இதனால் நானும் என் உறவினர்களும் இறுதிச்சடங்கு செய்தோம்'' என்றார் ரமேஷ் எம்.எல்.ஏ!

Sponsored
Trending Articles

Sponsored