கணவர்களுக்காகக் குரல் கொடுத்த பா.ஜ.க எம்.பி! மக்களவையில் அதிர்ந்த சிரிப்பலைSponsoredமனைவியின் டார்சர்களிலிருந்து கணவரைக் காப்பாற்றத் தனி ஆணையம் வேண்டும் என்று கேட்டு மக்களவையில் அனைவரையும் அதிர வைத்துள்ளார் பா.ஜ.க எம்.பி ஒருவர்.


 

மகளிர் ஆணையம்போல், ஆண்களுக்கும் பிரத்யேக ஆணையத்தை அமைக்க வேண்டும் எனப் பா.ஜ.க எம்.பி ஹரிநாராயண் ராஜ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (4.8.2018) மக்களவையில், ஜீரோ ஹவரின் (Zero Hour) போது அஸ்ஸாம் குடியுரிமை பிரச்னை, பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் என விவாதங்கள் காரசாரமாகச் சென்றுகொண்டிருந்தது. தீவிர விவாதங்களைக் கண்டுக்கொள்ளாத பா.ஜ.க எம்.பி ஹரிநாராயண் ராஜ்பர், மனைவியிடமிருந்து ஆண்களைக் காப்பாற்றும் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசத் தொடங்கினார்.

`பெண்களுக்கென்று பிரத்யேகமாக `மஹிலா ஆயோக்’ (Mahila Aayog) உள்ளிட்ட ஆணையங்கள் உள்ளன. ஆனால், ஆண்களுக்கென்று அப்படி எதுவுமில்லை. வீட்டில் பெண்களிடம் சிக்கி ஆண்கள் பரிதவிக்கின்றனர். சில ஆண்களை அவர்களின் மனைவிகள் வீட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமை செய்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளைச் சமாளிக்க `புருஷ் ஆயோக்’ (Purush Aayog) என்ற ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று உணர்வுபூர்வமாகப் பேசி முடித்தார். ஒட்டுமொத்த ஆண்களின் குரலாகத் தன்னை முன்னிறுத்திப் பேசிய அவருக்கு அவையில் கைதட்டலுக்குப் பதிலாகச் சிரிப்பலைகள்தான் கிடைத்தது. மக்களவையிலிருந்த ஐந்து பெண் உறுப்பினர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் உரக்க சிரித்துவிட்டனர். 

Sponsoredஹரிநாராயண் எம்.பி வைத்த கோரிக்கை பற்றி உங்களின் கருத்து என்ன? 

Sponsored
Trending Articles

Sponsored