"முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது" -மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தகவல்Sponsoredமுல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாராமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014 மே 7ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரான குல்சன்ராஜ் உள்ளார். இந்த குழுவில் தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் உள்ளனர்.

Sponsored


Sponsored


இந்த ஆண்டு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், கடந்த வாரம் 135 அடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேபி அணையை பலப்படுத்த கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லவும், அணை பாதுகாப்பு குறித்தும், அணையின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மெயின் அணை, பேபி அணை, கேலாரி பகுதி மதகு பகுதி அணையின் நீர் கசிவு உள்ளிட்டவற்றையும் குழுவினர் பார்வையிட்டனர்.        இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ், `அணை பலமாக உள்ளது அணையின் நீர், கசிவு தண்ணீர், இருப்பின் அளவுக்கு சரியான  கசிவாக உள்ளது. எனவே அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு எந்த பிரச்னையும் இல்லை. மேலும் வல்லக்கடவு சாலை சீர் அமைக்கவும், பேபி அணை பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.Trending Articles

Sponsored