சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு - ஜெட் ஏர்வேஸ்க்கு ஒத்துழைப்புதர விமானிகள் சங்கம் முடிவுSponsoredவிமான எரிபொருளுக்கான விலை அதிகரித்திருப்பதாலும், சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதாலும் ஜெட் ஏர்வேஸ் விமானப்போக்குவரத்து நிறுவனம் பெரிய அளவில் வருமான இழப்பைச் சந்தித்து வருகிறது. என்வே அதனைச் சரிக்கட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் இறங்கத் தீர்மானித்தது. அதன் ஒருபகுதியாக ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் சம்பளத்தைக் குறைக்கலாமென ஆலோசித்து விமானிகளிடம் கருத்துக் கேட்டது. ஆனால் விமானிகள் அக்கோரிக்கையை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சங்கம், தற்போதைய சூழலில் விமானப் போக்குவரத்துத் துறை மிக்வும் இக்கட்டான சூழலை நோக்கிச் செல்வதை புரிந்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தது. நிறுவனத்தோடு நீண்ட கால மற்றும் தொடர்ச்சியான நல்லுறவையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்நிறுவனம் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதை நம்பிக்கையோடு பார்க்கிறோம் என்றும் தெரிவித்தது.

Sponsored


மேலும், இந்த இக்கட்டான காலகட்டத்தை, சவாலை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு முறியடிப்போம் என்று தெரிவித்தது. எங்களது செயல்திறனை அதிகரிப்பது, சேவைத்தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் மூலம் வருமான இழப்பிற்கு நல்லதொரு தீர்வினை எட்டுவோம் என்றும் தெரிவித்திருக்கிறது. அதேபோல, தொழிற்சங்க உறுப்பினர்கள், வதந்திகள் மற்றும் அடிப்படையற்ற ஊகங்களுக்கு இரையாகாமல், நிறுவனத்தின் பொதுவான இலக்குகளை எட்டுவதற்கு முழுஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
 

Sponsored
Trending Articles

Sponsored