`பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி' - திருநங்கைகளுக்குக் கைகொடுத்த பினராயி விஜயன்! Sponsoredதிருநங்கைகளுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அறிவித்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

திருநங்கைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, திருநங்கைகள் உயர்கல்வி பயில்வதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் அனைத்துப் பிரிவுகளிலும் கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்கி சமீபத்தில் கேரள அரசு அறிவித்தது. இதேபோல் கேரளாவின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென சிறப்பு பிரிவு தொடங்கப்படும் என அறிவித்தது. இதற்கான ஆயுத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கைகளின் முக்கிய பிரச்னைக்கு கைகொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை ஒன்றை பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

Sponsored


அதாவது திருநங்கைகளுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு கேரள அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள பினராயி விஜயன், இதுகுறித்து மேலும் கூறியதாவது, ``பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும். கேரள சமூக நீதித்துறையின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குக் கேரள அரசு எடுத்துவரும் முயற்சியின் தொடர்ச்சியாக இது இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored