எல்லையில் பாக்., ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்Sponsoredஎல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுத்து பாதுகாக்கவே நான் பாதுகாப்பு அமைச்சராக உள்ளேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட 10 விதமான வளர்ச்சி பணிகளுக்கு ராணுவத்துக்குச் சொந்தமான நிலங்களைக் கர்நாடக அரசுக்கு அளிக்க ஒப்புதல் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். 

Sponsored


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமனிடம் பாகிஸ்தானில் தேர்தல் முடிகள் வெளியான பிறகு காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “ எல்லையில் நடைபெறும் ஊடுருவலைத் தடுத்து பாதுகாக்கவே நான் இங்குப் பாதுகாப்பு அமைச்சராக உள்ளேன். பாகிஸ்தானில் என்ன நடந்தாலும் அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எப்போது எங்களின் நிலைப்பாடு மாறாது ஒவ்வொரு ஊடுருவல் முயற்சிகளும் முற்றிலும் முறியடிக்கப்படும். வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் விமான கண்காட்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை விரைவில் முடிவு அறிவிக்கப்படும். டோக்லம் பிரச்னை தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு சுஸ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கமளித்துள்ளார் அது பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை” எனக் கூறினார். 

Sponsored


இறுதியாக ஓ.பி.எஸ் சகோதரருக்காக ராணுவ ஹெலிகாப்டர் அளிக்கப்பட்டது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாகப் புன்னகைத்துவிட்டு ‘நன்றி’ எனக் கூறி புறப்பட்டுவிட்டார். Trending Articles

Sponsored