மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு - அஸ்ஸாம் போலீஸ் அதிரடி



Sponsored



அஸ்ஸாம் விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் விதமாக அம்மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்து வந்தது. இதன்மூலம் வங்கதேச மக்களை எளிதாக அடையாளம் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து மக்களின் ஆவணங்களையும் சரிபார்த்து பட்டியல் தயார் செய்தது. இதன்படி முன்னதாக வெளியான வரைவு பட்டியலில் பல சிக்கல் எழுந்தது. அவை அனைத்தையும் சரி செய்து அடுத்த வரைவுப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதற்கு 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்த நிலையில் 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்ட விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பெரும் விவாதம் நடைபெற்றது. 

Sponsored


இதைத்தொடர்ந்து அசாம் விவகாரத்தில் ஓட்டு வங்கிக்காகவே மத்திய அரசு பலரை விரட்டியடிக்க நினைப்பதாகவும் விடுபட்ட பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர்களும் விடுபட்டுள்ள என மத்திய அரசைக் கடுமையா விமர்சித்திருந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் அசாம் விவகாரத்தில் மக்களிடையே வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் கூறி கீதா நகர், கோலகாட், ஜஹிரோட் ஆகிய காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்துள்ளது அசாம் மாநில காவல்துறை. 

Sponsored




Trending Articles

Sponsored