இறந்த பின்பும் கண்களாக வாழ்கிறாள்: தந்தையின் உருக்கம்



`என் மகள் உயிரோடு இல்லை. ஆனால், அவளது கண்கள் மூலம் அவள் இருப்பதாக உணர்கிறோம்’ காதல் விவகாரத்தில் தனது மகளை இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் உருக்கமான பேச்சு.

Sponsored


மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் பிராச்சி ஷாடே (Prachi Zade). இரண்டாமாண்டு கல்லூரி மாணவி.  இவர் கடந்த 4-ம் தேதி வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பவார் (Pawar) என்ற வாலிபர் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். அந்த நபர் இவரைக் காதலித்து வந்ததாகவும். ஆனால், பிராச்சி அவரது காதலை நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் பிராச்சியை தான் வைத்திருத்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைத்தடுமாறிய பிராச்சி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

Sponsored


பிராச்சியின் கண்களை அவரது குடும்பத்தினர் தானே மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதுகுறித்து பிராச்சியின் தந்தை விகாஸ் கூறுகையில், ``என் மகள் லட்சியத்தோடு இருந்தாள், சுதந்திரமாக இருக்க விரும்பினாள், ஒரு வங்கியாளர் அல்லது தொழில்முனைவோராக இருக்க விரும்பினாள். தன் கனவுகளை நிறைவேற்றுவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னர் கபூர்பவதி (Kapurbawdi) என்ற திருமணதளம் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். தான் இறந்த பிறகு தன் கண்களை தானமாக வழங்க வேண்டும் என விரும்பினார். நாங்கள் அதை மதிக்கிறோம். அவளது கண்கள் மூலம் தன் சொந்த அடையாளத்தை வைத்திருக்க விரும்பிய இந்த அழகான உலகத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்” என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored