`நான் யாரு தெரியுமா?’ - போக்குவரத்துக் காவலரை தகாத வார்த்தைகளால் பேசி மாட்டிக்கொண்ட பா.ஜ.க பிரமுகர்Sponsoredபோக்குவரத்துக் காவலரை மதிக்காமல், விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  


 

நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்திருந்த ஒரு நபர், போக்குவரத்துக் காவலர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, வண்டியை வேகமாக எடுத்துச் சென்ற வீடியோ, கடந்த சனிக்கிழமை முதல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அந்த வீடியோ  குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில்தான்.

கடந்த சனிக்கிழமை இரவு விஜயவாடாவின் பந்தர் சாலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு வருகைக்காகப் போக்குவரத்துக் காவலர்கள் மும்முரமாகப் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஷாப்பிங் மால் எதிரே ஒரு சஃபாரி கார், நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காவலர்கள், ஷாப்பிங் மால் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்து, காரை அந்த இடத்திலிருந்து எடுக்கச் சொன்னார்கள். ஆனால், காரின் உரிமையாளர் காரை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துக் காவலர்கள், காரை பறிமுதல் செய்ய காவல்துறையின் வாகனத்தை எடுத்து வந்தனர். அதைப் பார்த்த காரின் உரிமையாளர் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டவுன் போக்குவரத்து ஆய்வாளர் தாமோதர் என்பவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த நபர்,  `நான் பா.ஜ.க-வில் இருக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’  என்று கூறிக்கொண்டே காரை ஆன் செய்து, எதிரில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளை இடிப்பதுபோல் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். அந்த நபர் பா.ஜ.க-வைச் சேர்ந்த லகா வெங்கல் ராவ் யாதவ் என்பது தெரியவந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் போக்குவரத்து ஆய்வாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored