43,000 கிராமங்கள்... நக்சலைட் பிரச்னை... இணையத்தால் இணைக்கப்படாத இந்தியா! #VikatanInfographicsSponsoredன்றைக்கு எல்லோரிடமும் இணையம் சென்றுவிட்டது. `வாட்ஸ் அப் பார்க்காத ஆளே இல்லை'னு நிறைய தகவல்கள் சுத்திட்டு இருக்கும் இந்த நேரத்தில் `இந்தியாவில் 43 ஆயிரம் கிராமங்களில் இணைய சேவை இல்லை' என்கிற தகவல் எல்லாருக்குமே அதிர்ச்சிகரமான தகவல்தான். பிரதமர் நரேந்திர மோடி `டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, ``இந்தத் திட்டத்தின் மூலம் 120 கோடி இந்தியர்களும் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு, புதுமை படைப்பார்கள் என்பதைக் கனவு காண்கிறேன்” என்றார். 

நான்காண்டுகள் கழித்து சில நாள்களுக்கு முன்பு, மக்களவையில் நடந்த விவாதத்தில் `இந்தியா முழுவதும் எத்தனை கிராமங்களுக்குக் கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி சென்றுசேரவில்லை?” என்றும், ``அந்த கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ``இந்தியா முழுவதும் ஏறத்தாழ 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை. இந்த கிராமங்கள் பெரும்பாலும் நக்சலைட்கள் இருக்கும் மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. இந்த மாநிலங்களின் நலனுக்காக 7,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். இந்தியா முழுவதும் ஏறத்தாழ 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இவற்றுள் 83 கிராமங்களில் செல்போன் சேவை வழங்கப்படாமல் இருக்கிறது. 

Sponsored


Sponsored


நக்சலைட்களின் போராட்டங்கள் அதிகமுள்ள மாநிலங்களான ஆந்திர பிரதேசம், பீஹார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செல்போன் சேவை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவின் அறிக்கை கூறுகிறது. மேலும், இவற்றில் மிக அதிகமாக, ஒடிஷாவில் உள்ள 47 ஆயிரம் கிராமங்களில், ஏறத்தாழ 10 ஆயிரம் கிராமங்களில் செல்போன் சேவை இல்லை. யூனியன் பிரதேசங்களான சண்டிகர், தாத்ரா ஹவேலி, டாமன் டியூ, புதுச்சேரி, டெல்லி ஆகியவற்றில் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் கேரளாவில் மட்டும் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. 

எனினும், நாடு முழுவதும் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 2007 ம் ஆண்டு நாடு முழுவதும் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 15 கோடியாக இருந்தது. தற்போது, அந்த எண்ணிக்கை 113 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாட்டில் செல்போன்களின் பயன்பாடு எந்த அளவு இருக்கிறது என்பதையறிந்து வயர்லெஸ் டெலி டென்சிட்டி (Wireless Teledensity) கணக்கிடப்படுகிறது. அதில் நூறு மனிதர்களுக்கு எத்தனை செல்போன்கள் பரவியிருக்கின்றன என்பது அளவுகோளாக வைக்கப்படுகிறது. அதன்படி, 2009 ம் ஆண்டு இந்திய அளவில் நூறு நபர்களுக்கு 39 செல்போன்கள் இருந்தன எனக் கணக்கிடப்பட்டு, தற்போது அந்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் 2012 ம் ஆண்டு நூறு பேருக்கு 162 செல்போன்கள் இருந்தன எனக் கூறும் அறிக்கை, தற்போது அது குறைந்து 151 ஆகியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் 2012-ம் ஆண்டு நூறு பேருக்கு 34 செல்போன்கள் இருந்ததாகவும், தற்போது அது 56 ஆக அதிகரித்துள்ளதையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. டிஜிட்டல் இந்தியா மூலம் இந்தியாவை தொழில்நுட்பமயமாக்குவோம் என்று கூறும்போது இந்த 43 ஆயிரம் கிராமங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிக்கல்களை கலைந்து மக்களை இணையத்தோடு இணைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். Trending Articles

Sponsored