நகராட்சி ஊழியருக்கு 4 கோடிக்கு சொத்து? ரெய்டில் அதிர்ந்த அதிகாரிகள்Sponsoredஇந்தூரில் 18,000 மாதச் சம்பளம் வாங்கும் நகராட்சி ஊழியர் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: ANI

Sponsored


மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சியில் குரூப் D ஊழியராகப் பணியாற்றி வருபவர் கான். இவர் 1998-ம் ஆண்டு மாதச்சம்பளம் 500 ரூபாய்க்குப் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் மாதச் சம்பளமாக 18 ஆயிரம் பெறுகிறார். இந்நிலையில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து ரூ.22,00,000 கைப்பற்றப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Sponsored


இதுகுறித்து பேசிய லோக் ஆயுக்தா அதிகாரிகள், கான் தொடர்பாக எங்களுக்கு வந்த புகாரையடுத்து அவருக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவருக்கு சுமார் 4 கோடி மதிப்பிலான சொத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து  ரூ.22,00,000  ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தூர், ராட்லம், டெவாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், பிளாட்கள் உட்பட 20 அசையா சொத்துகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 கிராம் அளவுள்ள தங்க பிஸ்கட்டுகள், 2 சொகுசுக் கார்கள் கைப்பற்றப்பட்டன. இவரது குடும்பத்தினர் பேரில் 10 வங்கிக்கணக்குகள் உள்ளன. இதில் ஏராளமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.Trending Articles

Sponsored