காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - ராணுவ மேஜர் உட்பட 4 பேர் பலி!காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ராணுவ மேஜர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். 

Sponsored


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அடிக்கடி காஷ்மீர் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்து வருகின்றன. இதில் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் பகுதியில் இன்று காலை இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

Sponsored


நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். பின்னர் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடர்வதால் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதியில் கூடுதல் பதற்றம் நிலவி வருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored