சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் - ராஜினாமா செய்தார் பீகார் பெண் அமைச்சர்!Sponsoredசிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் பீகார் அமைச்சர் மஞ்சு வெர்மா ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாகூர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் முசாஃபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரவிக்குமார் ரௌஷனும் ஒருவர் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பீகார் மாநில அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்தேஷ்வருக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. 

Sponsored


இதையடுத்து அமைச்சரை பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மஞ்சுளா, `இந்தக் குற்றச்சாட்டில் உண்மையிருக்க வாய்ப்பில்லை. இருக்கும்பட்சத்தில் என் கணவரை தூக்கிலிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை' என விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகி வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், `இந்த வழக்கில் யாராக இருந்தாலும், அமைச்சராகவே இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, எதிர்ப்புக்கள் வலுத்தநிலையில், அமைச்சர் மஞ்சு வெர்மா தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான ராஜினாமா கடிதத்தை முதல்வர் நிதீஷுக்கு அனுப்பியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored