மணல் சிற்பம் மூலம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்!ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

Sponsored


ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்துள்ள இவர், அவ்வப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகள், முக்கிய விஷயங்களைப் புகழ்பெற்ற பூரி கடற்கரையில் மணல் சிற்பமாக உருவாக்குவார். இவரின் இந்த முயற்சி சமூகவலைதளங்களிலும் செய்தித் தாள்களிலும் பிரதிபலிக்கும். 

Sponsored


அந்தவகையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி புகழ்பெற்ற பூரி கடற்கரையில் அவரின் உருவத்தை மணல் சிற்பமாக சுதர்சன் உருவாக்கியுள்ளார். மேலும் அதில், 1924 - 2018-ம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகத்துடன் சுதர்சன் வரைந்துள்ள மணல் சிற்பம் வெகுவாக ஈர்த்துள்ளது. பலரும் இதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored