வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம்..! பாரத் பந்தைத் திரும்பப் பெற்ற பட்டியலின அமைப்புகள்Sponsoredநாடு முழுவதும் பட்டியலின மக்கள் அமைப்புகள் அறிவிப்புவிடுத்திருந்த பாரத் பந்த் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18-வது பிரிவானது, பட்டியல் சமூகத்தினருக்குக் காயத்தையோ அவமதிப்பையோ இழைத்த குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், முன் ஜாமீன் தாக்கல்செய்ய முடியாது என்பது மாற்றியமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Sponsored


நாடு முழுவதும் ஏற்பட்ட கடும் எதிர்ப்பையடுத்து, மத்திய அரசு இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில் வன்கொடுமைச் சட்டத்தில் மீண்டும் பழைய அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, பட்டியலின மக்கள் இன்று நாடு தழுவிய அளவிலான பந்துக்கு (கடையடைப்பு) அழைப்புவிடுத்திருந்தனர். இதற்கிடையில், லோக்சபாவில் எஸ்.சி, எஸ்.டி மசோதா மீது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் திருத்தம் மேற்கொண்டது. அதையடுத்து, அனைத்திந்திய அம்பேத்கர் மஹாசபா நாடு தழுவிய அளவிலான பந்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored