சிவில் உரிமைகள் பாதுகாப்பு! - இந்தியரை டிக் செய்த ட்ரம்ப்Sponsoredஅமெரிக்க வாழ் இந்தியரான ஆதித்யா பம்ஜாயைத் தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகள் மேற்பார்வை வாரியத்தில் உறுப்பினராக நியமித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் அந்நாட்டின் அரசாங்க நிர்வாகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர். அதன் வகையில், தற்போது தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகள் ( Privacy and Civil Liberties) அமைப்பில் இந்தியரான ஆதித்யா பம்ஜாய் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் பேராசிரியராகக் கடந்த 2016-ல் இருந்து பணியாற்றியவர் ஆதித்யா பம்ஜாய் (Aditya Bamzai). இவர், சிவில் நடைமுறை, நிர்வாகச் சட்டம், மத்திய நீதிமன்றங்கள் தொடர்பான பாடப்பிரிவு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கணினி குற்றவியல் உள்ளிட்ட பாடங்களை எடுத்து நடத்தி வருகிறார். அத்துடன், இப்பாடங்கள் தொடர்பான கட்டுரை எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

Sponsored


முன்னதாக, யேல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்ற ஆதித்யா, சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். இதனையடுத்து, அமெரிக்க நீதித்துறையின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய ஆதித்யா, அமெரிக்க உச்ச நீதிமன்றத்திலும் பணியாற்றி உள்ளார். 

Sponsored


இந்நிலையில், அமெரிக்காவை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பது மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகக் குழுவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேற்பார்வையிடும் அமைப்பான, தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக, ஆதித்யா பம்ஜாயை நியமித்துள்ளார் அதிபர் ட்ரம்ப் . இந்தக் குழுவில் வரும் 2020, ஜனவரி 29-ம் தேதி வரை ஆதித்யா நீடிப்பார். Trending Articles

Sponsored