‘சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ - மத்திய அரசு வேண்டுகோள்Sponsoredசுதந்திர தின விழா அடுத்த வாரம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மக்கள் பிளாஸ்டிக்கில் ஆன கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

பிளாஸ்டிக் பொருள்கள் மக்குவதற்குப் பலவருடங்கள் ஆகும். தற்போது பிளாஸ்டிக் உற்பத்திகள் மற்றும் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை யாரும் மறு சுழற்சி செய்வதில்லை. உலகில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளில் பாதி கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் பல்வேறு விலங்கு மற்றும் உயிரினங்களுக்கு ஆபத்தாகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரினங்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகும் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இது போன்ற இன்னல்களைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு பிரசாரங்கள் செய்து வருகின்றன. சில மாநிலங்களில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


அதன்படி வரும் 15-ம் தேதி இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பயன்படுத்தப்படும் தேசியக் கொடி பேப்பர் அல்லது துணியினால் ஆனதாக இருக்க வேண்டும், பிளாஸ்டிக் கொடிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

Sponsored


தேசியக் கொடி மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கக் கூடியது அப்படிப்பட்ட கொடியை முக்கியமான நிகழ்ச்சிகளில் கொண்டுவரும்போது துணி மற்றும் பேப்பர் கொடிகளாகக் கொண்டுவருவது நல்லது. பிளாஸ்டிக் கொடிகள் மக்குவதற்குப் பல வருடங்களாகும். எனவே, அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் உள்ளது. நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகளை அங்கேயே விட்டு எரியாமல் உரிய மரியாதையுடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த பிளாஸ்டிக் தடை விழிப்பு உணர்வை ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாகப் பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. Trending Articles

Sponsored