பாட்டியின் கருப்பையில் பிறக்கப்போகும் பேரக்குழந்தை!Sponsoredகருப்பை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன்மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். கருப்பை மாற்று சிகிச்சை மூலம் ஆசியக் கண்டத்தில் பிறக்கப்போகும் முதல் குழந்தை இது.

மென்பொருள் மற்றும் தொழில்துறையை அடுத்து மருத்துவ உலகிலும் அறிவியல் தொழில்நுட்பமானது வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்குச் சான்றாக, புதிய சாதனை ஒன்று ஆசியக் கண்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெண்களின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கருப்பை. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதைப் போன்று, கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவ உலகில் செய்யப்படுகிறது. உலகில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு, இதுவரையிலும் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, இந்தியா மற்றும் ஆசியக் கண்டத்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து, அதன்மூலம் முதல் முறையாகக் குழந்தையும் பிறக்க உள்ளது. 

Sponsored


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார். இதையடுத்து, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த அவர்கள், புனே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையை அணுகியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அந்தப் பெண்ணின் தாயின் கருப்பையை இவருக்குப் பொருத்தலாம் என முடிவு செய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து, அப்பெண் கருவுற்று, குழந்தையும் பெற்றெடுக்க உள்ளார். 

Sponsored


இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பெண், `என் அம்மாவின் கருப்பையிலிருந்து நான் பிறந்தேன்; அதே கருப்பையிலிருந்து என் குழந்தையும் பிறந்துள்ளது. மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார். Trending Articles

Sponsored