பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி சிறைப்பிடிப்புSponsoredஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு திரும்பியபோது திருமுருகன் காந்தி பெங்களூரு விமானநிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

File Pic

Sponsored


மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ பிரச்னைகள் மற்றும் தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக அதிகம் குரல் கொடுத்தவர். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

Sponsored


இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயில் இருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை தடுத்த விமான நிலைய காவலர்கள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் சிறைப்பிடித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில் சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு காவல்துறை திருமுருகன் காந்தியை கைது செய்ய பெங்களூரு விரைந்துள்ளனர். 

இதுதொடர்பாக திருமுருகன் காந்தியிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நடக்கும் மனித உரிமை குறித்து ஐரோப்பாவில் பேசியதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது, இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் என அரசாங்கம் இதன்மூலமும் நிரூபித்துள்ளது.

இதுதொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு  தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பியபோது, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.  இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என குறிபிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored