ஆடிட்டர் குருமூர்த்திக்கு ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது மத்திய அரசு!Sponsoredரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர்களில் ஒருவராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது 'துக்ளக்'  இதழின் ஆசிரியராக உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி 4 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 'ஃபினான்ஸியல் பொக்ரான்' என்று குருமூத்தி குறிப்பிட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக  வாராக்கடன்களை திரும்ப வசூலிக்காத வங்கிகளைக் கண்டிக்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் ரிசர்வ் வங்கி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி வந்த நிலையில்தான் பகுதி நேர இயக்குநர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Sponsored


குருமூர்த்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``முதன்முறையாக என் வாழ்க்கையில் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்கிறேன். இதற்கு முன், பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்களில் இயக்குநராக இருக்க விரும்பியதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். அதனால் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


ரிசர்வ் வங்கியில் official , non official இயக்குநர்கள் என இரு பிரிவு இயக்குநர்கள் உள்ளனர். இதில் குருமூர்த்தி non official  இயக்குநராக செயல்படுவார். Trending Articles

Sponsored