`வாவ்.. அடிபொலி..!’ - 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் இடுக்கி அணைSponsoredகேரள மாநிலத்தில் அமைந்துள்ள இடுக்கி அணை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறவன், குறத்தி என்ற இரு மலைகளுக்கிடையே ஓடிய பெரியாற்றைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையில் ஷட்டர்கள் கிடையாது. 1976-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த ஆர்ச் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். முல்லைப் பெரியாறு அணையைவிட இடுக்கி அணை 7 மடங்கு பெரியது. இந்த அணை 170 மீட்டர் உயரமும் 366 மீட்டர் நீளமும் கொண்டது.  

இந்த அணையின் மொத்தக் கொள்ளவு 2,403 அடியாகும். அணையில் நீர் 2,390 அடியை எட்டியதும் க்ரீன் அலெர்ட், 2,395 அடியை எட்டியதும் ஆரஞ்ச் அலெர்ட், 2,397 அடியை எட்டியதும் ரெட் அலெர்ட் விடப்படும். ரெட் அலெர்ட் விடப்பட்ட 24 மணி நேரத்தில் செருதோனி பகுதியில் உள்ள ஐந்து மதகுகளின் மத்தியில் உள்ள மதகுகள் திறக்கப்படும். இதற்கு முன், 1981 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் இடுக்கி அணை திறக்கப்பட்டது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மூன்றாவது முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையிலிருந்து தற்போது தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored