அதிவேகத்தில் வந்த சதாப்தி ரயில்... தண்டவாளத்தை 20 பசுக்கள் கடந்தபோது நடந்த துயரம்Sponsoredடெல்லியில் சில பசுக்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி 20 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. 

12005 என்ற எண் கொண்ட டெல்லி - கல்கா சதாப்தி விரைவு ரயில் நேற்று டெல்லியை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது. சரியாக மாலை 5:44 மணிக்கு நரேலா என்ற பகுதியைக் கடக்கும்போது 20 பசுக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 20 பசுக்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

Sponsored


இது பற்றி கூறிய ரயில்வே செய்தித் தொடர்பாளர், ``நேற்று மாலை நரேலா பகுதியில் மாடுகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அதிவேகத்தில் வந்த சதாப்தி ரயில் மோதி 20 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாடுகள் நிற்பதைக் கண்டு டிரைவர் அவசர பிரேக்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால், ரயில் மிகவும் வேகமாக வந்ததால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. விபத்து அரங்கேறியதும் அதே இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு மாலை 7 மணிக்குதான் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. தண்டவாளத்தில் சிறிய பழுது மட்டும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored