`இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை!' - கேரள முதல்வர் பினராயி விஜயன் கவலைSponsoredகேரளாவில் பெய்துவரும் கனமழையால், மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "இப்படி நடக்கும் என நான் நினைக்கவில்லை" என்று கேளர முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மாநிலத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்துவருகிறார்கள். மாநிலத்தின் மிக முக்கியச் சாலைகள் மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், மழைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். அதில் 10 பேர் இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவில் பலியாகியுள்ளனர். அதில் ஐவர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், மலப்புரம் மாவட்டத்தில் ஐந்து பேரும், கண்ணூர் மாவட்டத்தில் இரண்டு பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 18 பேர் மழை காரணமாகப் பலியாகியுள்ளனர்.

Sponsored


தொடர் மழை மற்றும் பலி காரணமாக, இன்று காலை அவரச பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அப்போது அவர் பேசும்போது, “மாநிலம் முழுவதிலும் உள்ள 22 அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்படுகிறது. அணைப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sponsored


மீட்புப் பணியைப் பொறுத்தவரை, அனைத்து துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து, பேரிடர் மீட்புக் குழு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இப்படி நடக்கும் என நான் நினைக்கவில்லை” என்றார். தொடர் மழை காரணமாகப் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.Trending Articles

Sponsored