முத்தலாக் மசோதாவில் திருத்தம்..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்முத்தலாக் மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Sponsored


ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதைக் கிரிமினல் குற்றமாக அறிவித்து கடந்தாண்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்களவையில் நிறைவேறிய மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த மசோதவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Sponsored


அந்த மசோதாவில், 'முத்தலாக் என்பது ஜாமீன் மறுப்புக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் நீதிபதியின் மூலம் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். முத்தலாக் விவகாரத்தில் அபராதத்தைக் குறைப்பது. பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் வழக்குப் பதிவு செய்ய அனுமதிப்பது' ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored