இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!Sponsoredடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது ஆதார் எண் இல்லாமல் ஆன்லைன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்துகொள்ளலாம். 

சமூக செயற்பாட்டாளர் ஸ்ரேயா சென் மற்றும் வழக்கறிஞர் சேட்புயூட் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஆதார் எண் குறித்த விவரங்கள் இல்லாமல் இணையத்தில் வருமான வரித் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்ய அனுமதித்தனர். அந்தத் தீர்ப்பு வந்து இரண்டு வார காலத்துக்குப் பிறகு வருமான வரி செலுத்தக்கூடிய இணையதளத்தில் ஆதார் எண் இல்லாமல் வருமான வரி செல்லும் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான தேதி ஜூலை 31-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored