கேரளாவுக்கு 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அறிவித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி..!



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Sponsored


கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்டது. கனமழையால் இதுவரை 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Sponsored


பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதனால், கேரளாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ராணுவ உதவி தேவை என்று மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கைவைத்துள்ளார். இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரிடரால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநிலத்துக்கு நிவாரண உதவியாக 10 கோடி ரூபாய் அளிக்கப்படும். கேரள மாநிலத்துக்கு தேவைப்படும் நிவாரணப் பொருள்களும் அனுப்பிவைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sponsored




Trending Articles

Sponsored