இடுக்கி உள்ளிட்ட 24 அணைகள் திறப்பு! தண்ணீரில் தத்தளிக்கும் கேரளாSponsoredகேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் மொத்தமுள்ள 40 அணைகளில் 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. கொல்லம் மாவட்டத்தில் தென்மலை, பத்தனம்திட்டாவில் காக்கி இடுக்கி மாவட்டத்தில் செருதோனி (இடுக்கி அணை) மலங்கரா, கல்லர்குர்ட்டி, லோயர் பெரியார் எர்ணாகுளம் மாவட்டத்தில் இடமலையாறு, பூதாத்தான்கெட்டு திருச்சூரில் பெரிங்கால்குது, லோயர் சோலையாறு, பீச்சி, வழனி பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா, மங்கலம், போதுன்டி, கஞ்சிரப்புழா, சிறுவானி, கோழிக்கோட்டில் காக்கையம், வயநாட்டில் பனசுரா சாகர், கரப்புழா, கண்ணுரில் பழசி ஆகிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 

PIC : coast guard

Sponsored


இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 2,403 அடி ஆகும். இன்று காலையில் நீர் 2,401 அடியை எட்டியது. இதனால் நேற்று பரிசாத்திய முறையில் திறக்கப்பட்ட அணை அதன்பிறகு மூடப்படவில்லை. நேற்று ஐந்து மதகுகளில் மத்தியில் உள்ள மதகு மட்டுமே திறக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 மதகுகள் 50 செ.மீட்டர் உயரத்துக்கு திறக்கப்பட்டன. விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் இடுக்கி அணையில் இருந்து வெளியேறுகிறது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாற்று வெள்ளம் கொச்சி நெடும்பாஞ்சேரி விமான நிலையத்துக்குள்ளும் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Sponsored


இடுக்கி மாவட்டத்தில் 11 பேரும் மலப்புரத்தில் 6 பேரும் கோழிக்கோட்டில் இருவரும் வயநாட்டில் ஒருவரும் மழைக்குப் பலியாகியுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் ஓடும் 44 ஆறுகளில் பவானி, கபினி, பாம்பார் ஆகிய 3 ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கி ஓடுகின்றன. மற்ற நதிகள் எல்லாம் மேற்காக ஓடி அரபிக்கடலில் வீணாக கலக்கின்றன. Trending Articles

Sponsored