சிறுவனை பாதித்த அந்த நாள்! 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்Sponsoredசிறையில் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளுக்காக சிறுவன் ஒருவன் தனக்கு கிடைத்த உதவித்தொகையை வழங்கியுள்ளார்.  இவரின் உதவியால் 14 கைதிகள்  சுதந்திர தினத்தன்று விடுதலையாகின்றனர். 

போபாலைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆயுஷ் கிஷோர் (Ayush Kishore). இவர் கல்வி தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இதன்காரணமாக இவருக்கு பல்வேறு உதவித்தொகைகள் கிடைத்து வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இவருக்கு கைதிகளுக்கு உதவுவதற்கு தூண்டுகோலாக இருந்துள்ளது. 2016-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிய கைதிகள் சிறைக்காவலரை கொலை செய்துவிட்டனர். அந்தக் காவலரின் மகளுக்கு சில நாள்களில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், அந்தக் காவலரின் குடும்பத்துக்கு உதவ ஆயூஷ் எண்ணியுள்ளார். தனக்குக் கிடைத்த பரிசுத்தொகை 10,000 ரூபாயை காவலரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.

Sponsored


இவரின் இந்த உதவும் குணத்தை அறிந்த தாய் சிறைக்கைதிகள் படும் இன்னல்களைத் தெரிவித்துள்ளார். பல சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதத் தொகை செலுத்த முடியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனக்குக் கிடைத்த உதவித்தொகையை சிறைக்கைதிகளுக்கு வழங்க முடிவுசெய்துள்ளார். இதற்காக ரூ.27,850 வழங்கியுள்ளார். இவரின் முயற்சியால் 14 கைதிகள் வரும் சுதந்திர தினத்தன்று விடுதலையாக உள்ளனர். இந்தூர் சிறையிலிருந்து 12 கைதிகளும், போபால் சிறையிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் கொலைக் குற்றவாளிகள். மேலும் 4 கைதிகளைக் குடியரசு தினத்தில் விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Sponsored


இதுகுறித்து ஆயுஷ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ``கடந்த ஜனவரி மாதம் 4 சிறைக்கைதிகள் வெளிவர உதவிபுரிந்தேன் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. அவர்களது குடும்பத்தினரை சந்தித்தவுடன் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த உற்சாகம்தான் எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் நிறைய கைதிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதையடுத்து தண்டனைக்காலம் முடிந்தும் அபராதம் செலுத்த முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளைச் சந்தித்தேன். அப்போதுதான் இன்னும் நிறைய பேர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. அதில் நிறைய பேருக்கு 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது” என்றார். ஆயூஷின் இந்த முயற்சிக்கு அவரின் தாயார் உறுதுணையாக இருந்து வருகிறார்.Trending Articles

Sponsored