நிலச்சரிவில் சிக்கிய வெளிநாட்டுப் பயணிகள்! - 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்ட ராணுவம்Sponsoredகேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கிய 22 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 60 சுற்றுலாப் பயணிகள் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டனர். 

கேரளாவில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டிருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால், அணையின்
5 ஷட்டர்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், செருதோணி ஆற்றின் கரையை உரசிக்கொண்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வயநாடு, மலப்புரம், கொச்சி, ஆலப்புழா, ஆலுவா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். 

Sponsored


Sponsored


Photo Credit:twitter.com/rama_rajeswari

இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த பள்ளிவாசல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த விடுதிக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. அந்த விடுதியில் தங்கியிருந்த 22 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ராணுவத்தின் உதவியுடன் கேரள வருவாய்த் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 7 மணி நேரத்துக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Photo Credit:twitter.com/rama_rajeswari

கேரளாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் முன்வந்திருக்கின்றன. மேலும், மத்திய அரசும் அனைத்துவிதமான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 12-ம் தேதி கேரளா செல்கிறார். 
 Trending Articles

Sponsored