கேரளாவில் தொடரும் கனமழை..! பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு; 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்Sponsoredகேரளாவில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. மேலும் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு அதிகரித்துவருகிறது. இடுக்கி அணையிலிருந்து ஐந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணையைத் தவிர்த்து மேலும் 24 அணைகள் நிரம்பி நீர் வெளியேற்றப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான நிலப்பரப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ள பாதிப்பினால் இதுவரையில் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


அதில், 25 பேர் நிலச்சரிவினாலும் 4 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர். தீயணைப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்கு 439 மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored