2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செங்கோட்டை..! சுதந்திர தினத்துக்குத் தயார்Sponsoredசுதந்திர தினம் வரவுள்ளதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்துறை அமைச்சகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை முழுவதும் 2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்குகள் நேற்று மாலை 6.30 மணி முதல் 11 மணி வரை எரிந்தது. சுதந்திரம் தினம் வரை தினமும் விளக்குகள் எரியவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


இந்த விளக்குகள் பொருத்துவதற்கு 3 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்தப் பணியை முடிப்பதற்கு இரண்டு மாத காலம் தேவைப்பட்டுள்ளது. முழுவதும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா முன்னிலையில், அந்த விளக்குகள் எரியவிடப்பட்டன. இதுகுறித்து தெரிவித்த அவர், 'நாடு முழுவதும் 100 வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை விளக்குகளால் அலங்கரிக்கும் திட்டம் உள்ளது. அதன் மூலம் இரவு சுற்றுலா பிரபலமாகும்' என்று தெரிவித்தார்.Trending Articles

Sponsored