`நான் என்றும் விவசாயிகளுடன் இருப்பேன்' - வேட்டியை மடித்துக்கட்டி வயலில் இறங்கிய குமாரசாமி! Sponsoredஅணைகளை பார்வையிடச் சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி திடீரென விவசாயிகளுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். 

கடந்த மாதம் பெய்த கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி முழுகொள்ளளவை எட்டின. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும் அங்குத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் மீண்டும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதுடன் விவசாய பணிகளையும் மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். அதிகளவு நீர் வரத்தால் கேஆர்எஸ் மற்றும் மற்ற அணைகளிலிருந்தும் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் நிரம்பியுள்ளது. 

Sponsored


இதற்கிடையே, இன்று தனது மனைவியுடன் மாண்டியா மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி அங்குள்ள கேஆர்எஸ் அணையை பார்வையிடச் சென்றவர் அங்குள்ள கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கு விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த குமாரசாமி யாரும் எதிர்பாராதவிதமாகத் தான் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி அணிந்து கொண்டு விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட ஆரம்பித்தார். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு அவர் நாற்று நட்டது அங்குள்ளவர்களை நெகிழ்ச் செய்தது. 

Sponsored


பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், ``நான் என்றும் விவசாயிகளுடன் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு செய்தேன். விவசாயிகள் தற்கொலை போன்ற எந்தவொரு கடினமான முடிவை எடுக்க வேண்டாம். இனி மாதம் ஒரு முறை விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவேன்" எனக் கூறினார். முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் இடம்பிடிப்பதற்காகக் குமாரசாமி முயற்சி செய்து வருகிறார். அதன்காரணமாக விவசாயிகள் கடன் தள்ளுபடி, வயல்களுக்கு நேரடி விசிட் எனத் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.Trending Articles

Sponsored