வீட்டில் திருடிய ரூ 45 லட்சத்தை நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்த 10 -ம் வகுப்பு மாணவன்!Sponsoredநண்பர்கள் தினத்தை விமர்சையாக கொண்டாட விரும்பிய தொழிலதிபரின் மகன் ஒருவர் செய்த காரியம் வியப்படையச் செய்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர், சமீபத்தில் தனது சொத்து ஒன்றை ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்திருக்கிறார். அந்த, தொகையைத் தனது வீட்டின் அலமாரியில் வைத்துள்ளார். இந்நிலையில், அலமாரியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை என்று அண்மையில் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் 10 -ம் வகுப்பு படிக்கும் மகனே பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.

Sponsored


இதுகுறித்து தொழிலதிபரின் மகனிடம் நடத்திய விசாரணையில், `வீட்டின் அலமாரியிலிருந்து ரூ. 46 லட்சம் எடுத்தேன். இந்த பணத்தை நண்பர்கள் பிரித்துக் கொடுத்து, நண்பர்கள் தினத்தை கொண்டாடினேன். எனது வகுப்பில் உள்ள 35 மாணவர்களிடம் பகர்ந்து கொண்டுத்தேன். பள்ளிப்பாடங்களை முடிக்க உதவிய நண்பர்களுக்கு ரூ.3 லட்சத்தைப் பகிர்ந்து கொடுத்தேன்' என்று கூறியுள்ளான். 

Sponsored


இதனையடுத்து, தனது மகனிடம் இருந்து பணம் பெற்ற மாணவர்களின் பட்டியலை போலீஸாரிடம் தொழிலதிபர் கொடுத்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு மாணவர்களையும் தொடர்பு கொண்டு பணத்தை திரும்பப் பெறும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். இதுவரையிலும் ரூ.15 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. தொழிலதிபரின் மகன் வழங்கிய பணத்தில் மாணவன் ஒருவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சில மாணவர்கள் செல்போன் போன்று தங்களுக்குத் தேவையான பல பொருள்களை வாங்கியுள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. எனினும் 5 நாளில் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனத்  தெரிவித்துள்ளனர் காவல்துறையினர். 
 Trending Articles

Sponsored