ஒரு வருடத்தில் 28 மாநிலங்களுக்கு விசிட் - சாதனைப் படைத்த வெங்கையா நாயுடுSponsoredஇந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற ஒருவருடத்தில் 28 மாநிலங்களுக்குச் சென்று சாதனைப் படைத்துள்ளார் வெங்கையா நாயுடு. 

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு பதவியேற்று நேற்றுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. இவர் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்த இந்த ஒருவருடத்தில் மட்டும் இந்தியாவின் 29 மாநிலங்களில் 28 மாநிலங்களுக்குச் சென்று சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக இவர் சிக்கிம் செல்லவும் திட்டமிட்டிருந்தார் ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் சென்ற ஒரே துணை குடியரசுத் தலைவர் என்ற சாதனையையும் வெங்கையா நாயுடு படைத்துள்ளார். 

Sponsored


இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வு குறிப்பில், ‘ கடந்த ஒரு வருடத்தில் வெங்கையா நாயுடு கலந்துகொண்ட 313 நிகழ்ச்சிகளில் 60 சதவிகிதம் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள 56 பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளார் அதில் 29 கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். மேலும் 15 அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் சென்று அங்கு மிகச் சிறந்த அறிவியலாளர்களுடன் உரையாடியுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored