வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா... குழந்தையைக் காப்பாற்றிய 'ரியல் ஹீரோ'வை புகழும் நெட்டிசன்கள்!Sponsoredகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் மழை பெய்துள்ளது. இதனால், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துளது.

கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 58,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Sponsored


இதனிடையில், இடுக்கி மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை `ரியல் ஹீரோ' என சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். அப்படி என்ன செய்தார் அந்த நபர்... கடந்த 10-ம் தேதியன்று இடுக்கி மற்றும் செறுதோணி அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தேசிய பேரழிவு மீட்பு படை குழுவினர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Sponsored


அன்றைய தினத்தில் செறுதோணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சின்கிங் பாலம் முழுவதுமாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, ஒரு கையில் குடையுடன் ஒருவர் தோலில் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். அவர், பாலத்தை கடந்து சென்ற சிறிது நேரத்திலே, பாலம் வெள்ளத்தால் சூழப்பட்டது. அந்த நபர் குழந்தையை வேகமாகத் தூக்கிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி, மலையாள மனோரமா, நியூஸ் 18 மலையாளம் உள்ளிட்ட  ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து, சமூக வலைதளங்களிலும் வேகமாக வீடியோ பரவியது. 'இவர்தான் ரியல் ஹீரோ' என நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்குகிறனர். 

இதன் பிறகு, அந்த நபர் யார் என்று அறிவதற்கான தேடுதல் வேட்டைத் தொடங்கியது. அவர் பெயர் கன்ஹையா குமார் என்பதும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,`இந்த பணியில் 6 வருடங்கள் அனுபவம் உள்ளது. அப்போது, என்னைச் சுற்றி பலபேர் இருந்தனர். ஆனால், குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருந்தது' என்றவரிடம், 

குழந்தையைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடும்போது என்ன நினைத்தீர்கள் எனக் கேள்விக்கு பதிலளித்த அவர்,` பாதுகாப்பான இடத்துக்குக் குழந்தையை அழைத்துச் சென்று, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது' என்றார். கன்யாயா குமாரால் மீட்கப்பட்ட குழந்தை கடுமையான காய்ச்சல் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. Trending Articles

Sponsored