மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்!Sponsoredமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. 89 வயதான இவர், இந்தியாவில் அதிக ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார்.  வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக, கடந்த 40 நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சைபெற்றுவந்துள்ளார். மூன்று நாள்களுக்கு முன்னர், உடல்நிலையில் முன்னேற்றமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

Sponsored


இந்நிலையில், நேற்று நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு, அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் உறுதிசெய்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Sponsored


இவரின் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் பலர் இரங்கள் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ சோம்நாத் சாட்டர்ஜி 10 முறை எம்.பி-யாகவும், முன்னாள் மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored