மீண்டும் சரிந்தது சந்தை! 13-08-2018



Sponsored



சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பங்குகள் சரிவைக் கண்டன. 

சென்ற வாரம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்ட சந்தை இன்று வர்த்தக நேரம் முழுதுமே களையிழந்து காணப்பட்டது. 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 224.33 புள்ளிகள் அதாவது 0.59 சதவிகிதம் சரிந்து 37,644.90 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, 73.75 புள்ளிகள் அதாவது 0.65 சதவிகிதம் கீழிறங்கி 11,355.75-ல் முடிந்தது.




துருக்கி நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடைகளும், உலோகப் பொருள்கள் மீதான வரியை இரட்டிப்பாக்கியிருப்பதும், அந்நாட்டின் கரன்சியான லிரா அதள பாதாளத்தில் தள்ளியிருக்கிறது. இதையடுத்து உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலை, அச்சமாகவே மாறியிருக்கிறது எனலாம். 

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மேற்குறிப்பிட்ட காரணத்தினால் பலவீனமுற்றன.

இந்திய சந்தையைப் பொறுத்தவரையில், கடந்த வெள்ளியன்று வெளியான தொழில் உற்பத்தி பற்றிய புள்ளி விவரம், இந்திய தொழில் உற்பத்தி ஜூன் மாதத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 7 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்று அறிவித்தாலும், இன்று வெளியாகவிருக்கும் பணவீக்கம் குறித்த அறிக்கைக்கு முன் பெரிய அளவில் முதலீட்டார்கள் பங்குகளை வாங்க தலைப்படவில்லை.
மேலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு 69.89 என்ற புதிய லோ-வை சந்தித்ததும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணம். 
வெள்ளிக்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக அறிவிக்கும் புள்ளி விவரமும், சந்தையின் குறுகிய கால செயல்பாடு பற்றிய ஐயத்தை உண்டாக்கியிருக்கிறது.

Sponsored


இன்று விலை சரிந்த பங்குகள் :

பாரத் பெட்ரோலியம் 5.4%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 4.5%
இண்டியாபுல்லஸ் ஹௌசிங் 4%
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் 3.5%
வேதாந்தா 3.4%
ஸ்டேட் பேங்க் 3.1%
யெஸ் பேங்க் 3.1%
வக்ராங்கி 20%
பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் 8.2%
சன் டிவி 7.8%

Sponsored


விலை அதிகரித்த பங்குகள் :

அப்பலோ ஹாஸ்பிடல் 12.8%
யுனைடெட் ப்ரவரிஸ் 8.3%
EIH  8.2%
பி.சி. ஜிவெல்லர்ஸ் 3.9%
ஜெட் ஏர்வேஸ் 3.7%
கெயில் இந்தியா 3.5%
டெக் மஹிந்திரா 2%
இன்ஃபோஸிஸ் 1.75%
இன்று மும்பை பங்குச் சந்தையில் 956 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1724 பங்குகள் விலை சரிந்தும், 177 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.



Trending Articles

Sponsored