இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!Sponsoredதுருக்கியில்ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

துருக்கி நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.மேலும் அங்கு  இருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகப் பொருள்கள் மீதான வரியை   இரட்டிப்பாக்கியுள்ளது. இதன்காரணமாக  அந்நாட்டின் கரன்சியான லிரா-வின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. துருக்கியின் பணமதிப்பு குறைந்ததால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது  உலக நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.62 ஆக சரிந்தது. இது  இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை அடுத்து ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது. நடப்பாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 8.7 விழுக்காடு குறைந்துள்ளது. அதேபோல் லிரா-வின் மதிப்பு 45 விழுக்காடு குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70 ஆக சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored