பிரத்யேக தொலைக்காட்சியைத் தொடங்குகிறது இஸ்ரோ!Sponsored இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, புதிய தொலைக்காட்சி சேனலைத் தொடங்க ஆயத்தமாகிவருகிறது. இந்த சேனல் விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாகச் செயல்பட உள்ளது. இஸ்ரோ நிறுவனம் பலவிதமான விண்வெளி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. பிற நாடுகளைவிட, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கிறது. 'ஆர்யபட்டா' தொடங்கி, இன்று PSLV வரை தொடர்ந்து சாதனைகளைப் படைத்துவருகிறது. இந்த நிலையில், தற்போது தொடங்க உள்ள புதிய சேனல் மிகவும் உபயோகமாக இருக்குமென இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் நோக்கம், அனைத்து மொழி மக்களின் கவனத்தைக் கவர்வதாகும். மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைத்து அறிவியல் அறிவைப் புகட்டுவதே ஆகும். விண்வெளி தொடர்பான அனைத்து நிகழ்வுகளைத் தெரிவிக்கவும் இது உதவும். இஸ்ரோவின் இந்தப் புதிய முயற்சி பயனளிக்கத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இஸ்ரோவின் நிகழ்வுகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Sponsored


விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக இந்த சேனல் தொடங்கப்பட உள்ளது. சாராபாய் 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இவரே, இஸ்ரோவின் முதல் தலைமை விஞ்ஞானி. இவரது நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Sponsored
Trending Articles

Sponsored