21 குண்டுகள் முழங்க தானமாக வழங்கப்பட்டது சோம்நாத் சாட்டர்ஜியின் உடல்!Sponsoredமறைந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உடல், ஆராய்ச்சிக்காக மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜி, 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்தியாவில் மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சாட்டர்ஜி. வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து விலகி கொல்கத்தாவில்  ஓய்வுபெற்றுவந்தார் சாட்டர்ஜி. இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால், சில தினங்களுக்கு முன் வீடு திரும்பிய சாட்டர்ஜி நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் மீண்டும் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு என உறுதிசெய்தனர். நீண்ட நேரமாக தீவிர சிகிச்சைப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

Sponsored


Sponsored


சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில், தனது உடலை கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரின் உடல் ஊர்வலமாக  கொண்டுவரப்பட்டு, முன்னதாக  அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சாட்டர்ஜியின் உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது.
 Trending Articles

Sponsored