டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சி!Sponsoredஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  70.01 ஆகச் சரிந்துள்ளது. இது, வரலாறு காணாத வீழ்ச்சி என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். 

துருக்கி நாட்டின்மீது சமீபத்தில் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அங்கிருந்து இறக்குமதிசெய்யப்படும் உலோகப் பொருள்கள் மீதான வரியை இரட்டிப்பாக்கியது ட்ரம்ப் அரசு. இதன்காரணமாக, துருக்கியின் லிரா-வின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. துருக்கியின் பணமதிப்பு குறைந்ததால், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது, உலக நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளது. 

Sponsored


இந்த நிலையில், இன்று காலை தொடங்கிய வர்த்தக  நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.01 ஆகச் சரிந்தது. இதனால், இந்திய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. நேற்றைய பங்குச் சந்தை முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.99 ஆக இருந்தது. அதற்கு, முந்தைய நாள், 69.95 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று தொடங்கிய வர்த்தக நேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored